/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பொருட்காட்சியில்மாணவர்களுக்குகட்டண சலுகைபொருட்காட்சியில்மாணவர்களுக்குகட்டண சலுகை
பொருட்காட்சியில்மாணவர்களுக்குகட்டண சலுகை
பொருட்காட்சியில்மாணவர்களுக்குகட்டண சலுகை
பொருட்காட்சியில்மாணவர்களுக்குகட்டண சலுகை
ADDED : ஜூலை 16, 2011 02:21 AM
கடலூர்:கடலூரில் நடந்து வரும் நுகர்வோர் பொருட்காட்சியில் பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு கட்டண சலுகை கூப்பன் வழங்கப்படுகிறது.கடலூர் மஞ்சக்குப்பம்
மைதானத்தில் நடைபெறும் தேசிய நுகர்வோர் பொருட்காட்சியில் முதல் முறையாக உள்
அரங்கம், பொழுது போக்கிற்காக சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ராட்சத
பலூன், பெரியர்கள், சிறியவர்கள் விளையாடும் படகு சவாரி, டோரா - டோரா,
ஜம்பிங் ஜாக் என விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், டில்லி
அப்பளம், சிம்லா பஜ்ஜி, பானிபூரி, கரும்பு ஜீஸ், காலி பிளவர் பக்கோடா
உள்ளிட்ட உணவு பொருட்கள், 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் வீட்டிற்குத்
தேவைப்படும், டைல்ஸ், சானிட்டரி வேர்ஸ்.
குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்
மற்றும் சமையல் உட்பட பெண்களுக்குத் தேவையான அனைத்து வகையான பொருட்களும்
விற்பனைக்கு உள்ளது.பொருட்காட்சியில் பள்ளி மாணவ, மாணவியர்களை கவரும்
வகையில் கட்டண சலுகை கூப்பன் வழங்கப்படுகிறது.