/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தம் கிராம மக்கள் கடும் அவதிஅரசு பஸ் போக்குவரத்து நிறுத்தம் கிராம மக்கள் கடும் அவதி
அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தம் கிராம மக்கள் கடும் அவதி
அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தம் கிராம மக்கள் கடும் அவதி
அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தம் கிராம மக்கள் கடும் அவதி
ADDED : செப் 06, 2011 10:39 PM
உளுந்தூர்பேட்டை : பஸ் வசதி இல்லாததால் எ.குறும்பூர் உள்ளிட்ட 3 கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை- கன்னியாங்குப்பம் இடையே அரசு டவுன் பஸ், மினி பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த வழி தடத்தில் காட்டுநெமிலி, எ.குறும்பூர், நாச்சியார்பேட்டை, மேப்புலியூர் கிராம மக்களும், மாணவர்களும் பயனடைந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் நாச்சியார்பேட்டையில் பாலம் கட்டுமான பணி துவங்கியதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உளுந்தூர்பேட்டையில் இருந்து கிள்ளனூர், மேப்புலியூர் வழியாக கன்னியாங்குப்பத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
மாற்று வழி தடத்தில் பஸ் இயக்கப்படுவதால் எ.குறும்பூர், நாச்சியார்பேட்டை பகுதி மக்கள் தினந்தோறும் 2 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க வேண்டிய நிலை உள்ளது. மாணவர்களும் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பாலம் கட்டுமான பணி முடிந்த பிறகும் அனுமதிக்கப்பட்ட வழி தடத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த வழியில் பஸ் போக்குவரத்தை மீண்டும் இயக்குவதற்கு அரசு போக் குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.