/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/அதிகாலையில் ஜான்பாண்டியன் விடுதலை ஆதரவாளர்களுடன் நெல்லைக்கு புறப்பட்டார்அதிகாலையில் ஜான்பாண்டியன் விடுதலை ஆதரவாளர்களுடன் நெல்லைக்கு புறப்பட்டார்
அதிகாலையில் ஜான்பாண்டியன் விடுதலை ஆதரவாளர்களுடன் நெல்லைக்கு புறப்பட்டார்
அதிகாலையில் ஜான்பாண்டியன் விடுதலை ஆதரவாளர்களுடன் நெல்லைக்கு புறப்பட்டார்
அதிகாலையில் ஜான்பாண்டியன் விடுதலை ஆதரவாளர்களுடன் நெல்லைக்கு புறப்பட்டார்
ADDED : செப் 14, 2011 12:03 AM
தூத்துக்குடி : முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பேரில் கைது செய்யப்பட்ட ஜான்பாண்டியனை நேற்று அதிகாலையில் போலீசார் விடுதலை செய்தனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் பரமக்குடியில் நடந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். வெளிமாவட்டங்களை சேர்ந்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என்றும் அதனால் வெளிமாவட்ட தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவதற்கு 144 தடையுத்தரவினை மாவட்ட கலெக்டர் பிறப்பித்திருந்தார். எனவே பரமக்குடிக்கு செல்ல முயன்ற ஜான்பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்களை வல்லநாடு அருகே நெல்லை சரக டிஐஜி., வரதராஜூ தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கையின் பேரில் கைது செய்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் ஜான்பாண்டியனுடன் கைது செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகள் 17 பேரை போலீசார் விடுதலை செய்தனர். ஜான்பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் 4 பேரை மட்டும் போலீசார் விடுவிக்காமல் வல்லநாடு துப்பாக்கி சூடும் தளத்தில் போலீஸ் பாதுகாப்பில் வைத்திருந்தனர். நேற்று அதிகாலை 6 மணியளவில் ஜான்பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் 4 பேரையும் போலீசார் விடுதலை செய்தனர். போலீஸ் முன் அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது என்று ஜான்பாண்டியனிடம் போலீசார் கூறியதாக தெரிகிறது. விடுதலை செய்யப்பட்ட ஜான்பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லைக்கு புறப்பட்டு சென்றார்.