/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூரில் தே.மு.தி.க., அன்னதானம் வழங்கல்அரியலூரில் தே.மு.தி.க., அன்னதானம் வழங்கல்
அரியலூரில் தே.மு.தி.க., அன்னதானம் வழங்கல்
அரியலூரில் தே.மு.தி.க., அன்னதானம் வழங்கல்
அரியலூரில் தே.மு.தி.க., அன்னதானம் வழங்கல்
ADDED : ஆக 08, 2011 02:38 AM
அரியலூர்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அரியலூர் மின் நகரில் அக்கட்சியினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அரியலூர் மின் நகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி கோவிலுக்கு, ஆடி பூரத்தை முன்னிட்டு நேற்று பக்தர்களின் தீச்சட்டி, பால்குடம் மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. அரியலூர் விளாங்கார தெருவில் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக நடந்த ஊர்வலத்தை தொடர்ந்து, மின் நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலாபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. தமிழக சட்டசபைக் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோவிலுக்கு தீச்சட்டி, பால்குடம் மற்றும் கஞ்சி கலயம் சுமந்து வந்த ஏராளமான பக்தர்களுக்கும், அரியலூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சிக்கு கோயில் நிர்வாக தலைவர் செல்வகணபதி, செயலாளர் ஊட்டி மருதமுத்து, பொருளாளர் கணேசன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.அரியலூர் தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிவா, மாவட்ட வக்கீல் அணி செயலாளர் கோபாலகிருஷ்ணா, ஒன்றிய செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், பொருளாளர் செல்வராஜ், நகர பொருளாளர் ராஜா, ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் மதி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பழக்கடை பாண்டியன், ஏழாவது வார்டு செயலாளர் ரவி, பள்ளக்காவேரி நிர்வாகிகள் ரவி, கோபி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


