ADDED : செப் 30, 2011 11:06 PM
குன்னூர் : கேத்தி பேரூராட்சி இரு வார்டுகளில் அ.தி.மு.க., ஆதரவு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குன்னூர் ஒன்றியத்துக்குட்பட்ட கேத்தி பேரூராட்சி 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு கமலா என்பவரும், 17வது கவுன்சிலர் பதவிக்கு சாந்தி என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களை எதிர்த்து எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆதரவு வேட்பாளர்களான இவர்கள்,மாநில உணவுத் துறை அமைச்சர் புத்திசந்திரனிடம் வாழ்த்து பெற்றனர். குன்னூர் ஒன்றிய செயலர் கலைச்செல்வன், கேத்தி பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், போஜன், சகாதேவன், ரவி உடனிருந்தனர்.