/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஓட்டளிக்காத வாக்காளர் அடையாள அட்டை ரத்து : தேர்தல் கமிஷன் உத்தரவுஓட்டளிக்காத வாக்காளர் அடையாள அட்டை ரத்து : தேர்தல் கமிஷன் உத்தரவு
ஓட்டளிக்காத வாக்காளர் அடையாள அட்டை ரத்து : தேர்தல் கமிஷன் உத்தரவு
ஓட்டளிக்காத வாக்காளர் அடையாள அட்டை ரத்து : தேர்தல் கமிஷன் உத்தரவு
ஓட்டளிக்காத வாக்காளர் அடையாள அட்டை ரத்து : தேர்தல் கமிஷன் உத்தரவு
ADDED : ஆக 17, 2011 02:34 AM
புதூர் : சட்டசபை தேர்தலில் கமிஷன் வழங்கிய பூத் சிலிப் பெற்று ஓட்டளிக்காத வாக்காளர்களின் அடையாள அட்டையை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரசியல் கட்சியினர் தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கட்சி சின்னம் பொறித்த பூத் சிலிப் வழங்கி ஓட்டு சேகரித்தனர். அரசியல் கட்சியினர் வழங்கும் அன்பளிப்பு, பணத்தை பெற்று சுதந்திரமாக வாக்களிப்பது தடுக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் கருதியது. இதனை தடுக்கவும், வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்பதற்காகவும், கமிஷனே நேரடியாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கியது. தேர்தல் கமிஷன் நேரடியாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கியதன் நோக்கமே தேர்தலில் நூறு சதவீத ஓட்டுப்பதிவு இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 78.12 சதவீத ஓட்டுகளே பதிவானது. 21 சதவீத வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை. தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்ட பூத் சிலிப்பை பெற்று ஓட்டளிக்காத வாக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில் வாக்களிக்காத வாக்காளர்களின் உண்மை நிலைமை ஆராய்ந்து முறையான காரணம் இல்லாமல் ஓட்டளிக்காதவர்களின் அடையாள அட்டையை ரத்து செய்ய கமிஷன் உத்தரவிட்டுள்ளது என்றார்.