மாதிரி பள்ளிகளில் சேர ஆள் இல்லை :40 இடங்களுக்கு 12 பேர் விண்ணப்பம்
மாதிரி பள்ளிகளில் சேர ஆள் இல்லை :40 இடங்களுக்கு 12 பேர் விண்ணப்பம்
மாதிரி பள்ளிகளில் சேர ஆள் இல்லை :40 இடங்களுக்கு 12 பேர் விண்ணப்பம்
சேலம் : கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள மாதிரி பள்ளியில், 6ம் வகுப்புக்கு, 12 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
அரசு பள்ளியில் இலவசமாக ஆங்கில வழிக்கல்வி என்பதோடு, அனைத்து அரசு சலுகைகளும் கிடைக்கும் என்பதால், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை மாணவ, மாணவியரும் ஆர்வத்துடன் இப்பள்ளியில் சேர்ந்தனர். கடந்த ஆண்டில், 40 மாணவர் கொண்ட ஒரு வகுப்பில் சேர குறைந்தபட்சம், 400 மாணவர் வரை விண்ணப்பித்தனர். இதனால், எழுத்துத்தேர்வு மூலம் மாணவர்களை தேர்வு செய்தனர். ஓராண்டு முடிந்த நிலையிலும், இப்பள்ளிகளுக்கு இன்னும் ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஓரிரு ஆசிரியர்களே அனைத்து வகுப்பு மாணவ, மாணவியரையும் பராமரிக்க வேண்டியுள்ளது. இதனால், நடப்பாண்டில், மாதிரி பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் பலரும், அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாறுதல் பெற்றுச் சென்று விட்டனர். இந்நிலையில், 'ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.
பல பள்ளிகளில், வகுப்புக்கு போதுமான விண்ணப்பங்களே வராத நிலை காணப்படுகிறது. கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள மாதிரி பள்ளியில், 40 பேர் சேர்க்க வேண்டிய ஆறாம் வகுப்புக்கு, 12 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். கிராமப்புற மாணவர்களுக்கு தரமான ஆங்கில வழிக்கல்வியை தர, மத்திய அரசு பல கோடி ரூபாய்களை ஒதுக்கியும், அவற்றை முறையாக பயன்படுத்தத் தவறிய அரசு அலுவலர்கள் மீது, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.