Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு பதிவு மூப்பு

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு பதிவு மூப்பு

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு பதிவு மூப்பு

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு பதிவு மூப்பு

ADDED : செப் 11, 2011 11:15 PM


Google News

சிவகங்கை : ''சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் 'கம்ப்யூட்டர் ஆபரேட்டர்' பணிக்கு, பதிவு மூப்புதாரர் விபரம் வெளியிட்டுள்ளதாக,'' சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலர் மனோகரன் தெரிவித்தார்.

கல்வி: பட்டத்துடன், பி.ஜி.,டி.சி.ஏ., அல்லது கம்யூட்டர் சயின்சில் பட்டம் அல்லது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழங்கிய 3 ஆண்டு டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் அவசியம். வயது : 1.7.2011 அன்று தாழ்த்தப்பட்டோர் 35க்குள், பிற்பட்ட, மிகபிற்பட்டோர் 32க்குள், பகிரங்க போட்டியினர் 30க்குள் இருக்கவேண்டும். காலிபணியிடங்களுக்கு தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர், மிக பிற்பட்டோர், பிற்பட்டோர் மற்றும் முஸ்லீம்களுக்கு வயது வரம்பில்லை.

தகுதி: முன்னுரிமை பிரிவில் பதிவு செய்த ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் செய்தோர், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரை சார்ந்தோர், அகதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி உண்டு. முன்னுரிமையற்றோர் பிரிவில் தாழ்த்தப்பட்டோர் 8.9.2004 வரையும், அருந்ததியினர் 31.12.2010 வரையும், மிகபிற்பட்ட வகுப்பில் 31.12.2004 வரையும், பிற்பட்டோர், பகிரங்கபோட்டியினர் 14.8.2003 வரை பதிவு செய்தவர்களும் பரிந்துரைக்கப்படுவர். இத்தகுதி உள்ள மனுதாரர்கள் இன்று (செப்.,12) அன்று காலை 11 மணிக்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு உரிய சான்றுகளுடன் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us