மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரர் மாயம்
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரர் மாயம்
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரர் மாயம்
ADDED : செப் 11, 2011 11:35 PM
கடலூர்: நெய்வேலியில் காணாமல் போன, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரரை, போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கீழ்வைகுண்டம் அடுத்த சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரன். மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரரான இவர், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி., இரண்டாம் சுரங்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 8ம் தேதி, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை குழுவின் தலைவர் சரவண்டோமர் வருகைப் பதிவேடு எடுத்த போது, சங்கரனை காணவில்லை. அதைத் தொடர்ந்து, அவரது மனைவிக்கு போன் செய்து கேட்டபோது, அங்கும் அவர் செல்லவில்லை எனத் தெரிந்தது. சரவண்டோமர் கொடுத்த புகாரின்படி, நெய்வேலி தர்மல் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரர் சங்கரனை தேடி வருகின்றனர்.