/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கல்லூரி வாகனங்களை நிறுத்தி போராட்டம்கல்லூரி வாகனங்களை நிறுத்தி போராட்டம்
கல்லூரி வாகனங்களை நிறுத்தி போராட்டம்
கல்லூரி வாகனங்களை நிறுத்தி போராட்டம்
கல்லூரி வாகனங்களை நிறுத்தி போராட்டம்
ADDED : ஆக 11, 2011 02:36 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட்டில் சுங்கவரி உயர்வை கண்டித்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மாணவர்கள் மற்றும் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பைனப்பள்ளி டோல்கேட்டில் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று மூன்றாவது நாளாக பஸ்களை நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று மாலை 5.30 மணிக்கு ஓசூர் பகுதியில் இருந்து வந்த தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பஸ் டிரைவர்கள் டோல்கேட்டில் மாத பாஸை காட்டி என்டரி போட்டுள்ளனர். அப்போது ஒரு என்டரிக்கு பதிலாக ஒரே நேரத்தில் 14 என்டரியை டோல்கேட் பணியாளர்கள் செய்துள்ளனர். இதை டிரைவர்கள் தட்டி கேட்டனர். இதற்கு டோல்கேட் பணியாளர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த டிரைவர்கள் சுங்க வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரி டோல்கேட் சாலையின் குறுக்கே பஸ்ஸை நிறுத்தி மாணவர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீஸார் தனியார் கல்லூரி மற்றும் பள்ளி பஸ் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிக என்டரி போட்டது குறித்து இரு தரப்பினரையும் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று போலீஸார் உறுதியளித்தனர். இதனை ஏற்று டிரைவர்கள் பஸ்ஸை எடுத்தனர்.