ADDED : செப் 16, 2011 12:00 AM
அரியலூர்: அரியலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் அரியலூர் வட்டார கிளையின் நிர்வாக குழு கூட்டம், சங்கத்தின் வட்டார தலைவர் ஞான சண்முகம் தலைமையில் நடந்தது. பொருளாளர் முத்துலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது பெற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரனை பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், விருது வழங்க பரிந்துரைத்த கல்விதுறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், வட்டார செயலாளர்கள் நீதிபதி, ஜெயராஜ், சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


