ADDED : ஜூலை 14, 2011 09:27 PM
கோவை : கோவை முதலாவது மாவட்ட கூடுதல் முன்சீப் கோர்ட் நடுவராக பணியாற்றும்
இந்திராகாந்தி சென்னை ஜூடிசியல் அகாடமிக்கு மாற்றப்பட்டார்.
இவருக்கு
பதிலாக சென்னையில் இருந்து நடுவர் கோபி, முதலாவது கூடுதல் மாவட்ட முன்சீப்
ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திராகாந்தியை மாற்றக் @காரி @காவை வக்கீல்கள்
காலவரையின்றி கோர்ட்டை புறக்கணிக்கப்போவதாக எச்சரித்தனர். 'விரைவில்
நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஐகோர்ட்டில் இருந்து உறுதி அளிக்கப்பட்டதால்,
கோர்ட் புறக்கணிப்பு ரத்து செய்யப்பட்டது. இச்சூழலில்,நேற்று நடுவர்
இந்திராகாந்தி மாற்றப்பட்டுள்ளார். கோவை வக்கீல்கள் சங்க தலைவர்
நந்தகுமார், செயலாளர் ரிச்சர்ட் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட நீதிபதியை
சந்தித்து நன்றி கூறினர்.


