Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சாலை விபத்துகள்: நான்கு பேர் பலி

சாலை விபத்துகள்: நான்கு பேர் பலி

சாலை விபத்துகள்: நான்கு பேர் பலி

சாலை விபத்துகள்: நான்கு பேர் பலி

ADDED : அக் 03, 2011 10:58 PM


Google News

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில், நான்கு பேர் உடல் நசுங்கி இறந்தனர்.ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தபான்பியா, 22.

இவர், ஒரகடம் அடுத்த மாத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 1ம் தேதி இரவு 10 மணிக்கு, கம்பெனி அருகே சாலையைக் கடந்தார். அப்போது, ஒரகடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதியது. பலத்தக் காயமடைந்தவரை, அருகிலிருந்தோர் சிகிச்சைக்காக, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்தார்.படப்பை அருகே, தனியார் மதுபான தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள், நேற்று காலை மகேந்திரா வேனில், வேலைக்கு சென்றனர். காலை 5.15 மணிக்கு, ஒரகடம் கூட்ரோடு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் நின்ற டாரஸ் லாரி மீது மோதியது.வேனிலிருந்த, உள்ளாவூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த அம்மு, 20, பிரேமா, 25, அனிதா 27, அருள்மணி 30, சத்யா 20, உட்பட 22 பேர் காயமடைந்தனர், அனைவரும் சிகிச்சைக்காக, படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின், மேல் சிகிச்சைக்காக, குரோம் பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அம்மு இறந்தார். ஆறு பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து எம்.எல்.ஏ., பெருமாள் மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.மாமல்லபுரம்: சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்த மருதுபாண்டி மகன் ரஞ்சித்குமார், 24. அங்குள்ள ரவுண்டானா அருகில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த 2ம் தேதி, சென்னை அடுத்த பெருங்குடியில் உள்ள, சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு, பஜாஜ் பல்சர் மோட்டார் சைக்கிளில், சதுரங்கப்பட்டினத்திற்கு திரும்பி வந்தார். மாமல்லபுரம் அடுத்த மணமை பஸ் நிறுத்தம் அருகே, பகல் ஒரு மணிக்கு சென்றபோது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. அவர் அதே இடத்தில் இறந்தார்.

அதே பகுதியில், இரவு 9 மணிக்கு, 70 வயது மதிக்கத்தக்க முதியவர், சாலையோரம் நடந்து சென்றார். அவ்வழியே சென்ற மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதியது. பலத்தக் காயமடைந்த அவர், அதே இடத்தில் இறந்தார். அவர் குறித்த விவரம் தெரியவில்லை. இவ்விபத்துகள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us