Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அரை நிர்வாண நிலையில் பெண் பிரேதம்: போலீஸ் தீவிர விசாரணை

அரை நிர்வாண நிலையில் பெண் பிரேதம்: போலீஸ் தீவிர விசாரணை

அரை நிர்வாண நிலையில் பெண் பிரேதம்: போலீஸ் தீவிர விசாரணை

அரை நிர்வாண நிலையில் பெண் பிரேதம்: போலீஸ் தீவிர விசாரணை

ADDED : செப் 18, 2011 01:08 AM


Google News

திருச்செங்கோடு: உஞ்சனை ஏரிக்கரையில், பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் இறந்து கிடந்தது குறித்து, திருச்செங்கோடு ரூரல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு அருகே உஞ்சனை ஏரிக்கரையில், நேற்று மாலை ஒரு பெண் பிரேதம் கிடந்துள்ளது. தகவல் அறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, பெண் இறந்து கிடந்த இடத்தில் கைப்பை ஒன்று கிடந்துள்ளது.



அதனுள் இருந்த ரேஷன் கார்டில், திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தோரது முகவரி இருந்துள்ளது. அந்த முகவரியில் உள்ள பெயரைச் சேர்ந்த பெண்ணாக இருக்கும் என, போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், அப்பெண் அரை நிர்வாண நிலையில், உடலில் ரத்தக் காயம் எதுவும் இல்லாத நிலையில் கிடந்துள்ளார். அவரைச் சுற்றி மதுபான பாட்டில் கிடந்துள்ளது. அதனால், அவர் விபச்சார அழகியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரூரல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us