/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கொலை வழக்கை வாபஸ் பெற மிரட்டியவர் மீது "குண்டாஸ்'கொலை வழக்கை வாபஸ் பெற மிரட்டியவர் மீது "குண்டாஸ்'
கொலை வழக்கை வாபஸ் பெற மிரட்டியவர் மீது "குண்டாஸ்'
கொலை வழக்கை வாபஸ் பெற மிரட்டியவர் மீது "குண்டாஸ்'
கொலை வழக்கை வாபஸ் பெற மிரட்டியவர் மீது "குண்டாஸ்'
ADDED : ஆக 18, 2011 12:25 AM
நரிக்குடி : கொலை செய்தவர் ஜாமினில் வந்து மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததால் குணடர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நரிக்குடி அருகே உலக்குடியை சேர்ந்த சிவநாரா யணனை கடந்த வருடம் அக். 19 ல் இதே ஊரை சேர்ந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன்கள் பழனிக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் கொலை செய்தனர். நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். தற்சமயம் மூவரும் நிந்தனை ஜாமினில் வெளியில் வந்தனர்.
இந்நிலையில் கோவிந்தன் மற்றும் அவரது மகன்கள் பழனிக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் இறந்த சிவநாராயணன் மனைவி இந்திராணியை, வழக்கை வாபஸ் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இந்திராணி புகார்படி நரிக்குடி இன்ஸ்பெக்டர் சண்முகம், கோவிந்தனை கைது செய்தார். கோவிந்தன் குண்டர் தடுப்புச்
சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.


