Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/"அறிவியல் பாடங்களைப் போல பிறபாடங்களுக்கும் முக்கியத்துவம்' : மாநாட்டில் வலியுறுத்தல்

"அறிவியல் பாடங்களைப் போல பிறபாடங்களுக்கும் முக்கியத்துவம்' : மாநாட்டில் வலியுறுத்தல்

"அறிவியல் பாடங்களைப் போல பிறபாடங்களுக்கும் முக்கியத்துவம்' : மாநாட்டில் வலியுறுத்தல்

"அறிவியல் பாடங்களைப் போல பிறபாடங்களுக்கும் முக்கியத்துவம்' : மாநாட்டில் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 14, 2011 01:29 AM


Google News

மதுரை : ''அறிவியல் பாடங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை பிற பாடங்களுக்கும் தரவேண்டும்,'' என சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் உதவிகமிஷனர் முரளி பேசினார்.

சென்னை மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் கேந்திரிய பள்ளி முதல்வர்கள் 3 நாள் மாநாடு நேற்று மதுரையில் துவங்கியது. இதில் 70 பள்ளி முதல்வர்கள் பங்கேற்றனர். சென்னை மண்டல கல்வி அதிகாரி பி.தேவகுமார் வரவேற்றார். மதுரை சென்ட்ரல் எக்சைஸ் கமிஷனர் வி.டி.கே.நாயனார் துவக்கி வைத்தார். கல்விஅதிகாரி டி.மணிவண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார்.



சென்னை மண்டல கேந்திரிய பள்ளிகளின் உதவி கமிஷனர் என்.ஆர்.முரளி தலைமை வகித்து பேசியதாவது: சென்னை மண்டலம், பத்து மற்றும் பிளஸ்2 வகுப்பு பொதுத் தேர்வில், தேசிய அளவில் நல்ல தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் செயல்படுத்த வேண்டும். அதற்கு ஆசிரியர், மாணவர், பெற்றோருக்கு தகுந்த சூழ்நிலையை முதல்வர்கள் உருவாக்க வேண்டும். தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை தேசிய அளவை விட சென்னை மண்டலம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக அறிவியல் பாடங்களில் நல்ல தேர்ச்சி கிடைத்துள்ளது. தேசிய அளவில் அறிவியல் பாடங்களில் முதல் 5 ராங்கில், 4 இடங்கள் சென்னை மண்டலமே பெற்றுள்ளது. ஆனால் இதில் மற்ற பாடங்களில் இல்லை. எனவே அவற்றுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். பொதுமக்கள், பள்ளிக்கு வரும் விசிட்டர்களிடம் முதல்வர்கள் நல்ல தொடர்பு வைத்திருக்க வேண்டும். வரும் காலங்களில் பள்ளிகள் எந்தளவு செயல்பட வேண்டும் என திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களை மிரட்டுவதாலோ, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாலோ எந்த மாற்றமும் வந்துவிடாது. அதுமட்டுமே முக்கியமானதல்ல. அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். செயல்பாடுகளில் தேக்கம் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us