/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உடல் உழைப்பு தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கைஉடல் உழைப்பு தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை
உடல் உழைப்பு தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை
உடல் உழைப்பு தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை
உடல் உழைப்பு தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை
சாத்தான்குளம் : தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒரு வருடம் ஆகியும் உதவித்தொகை வழங்கப்படவில்லை.
பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ஆயிரம் ரூபாய், பதினோறாம் வகுப்புக்கு ஆயிரம் ரூபாய், பிளஸ் 2 வகுப்பு ரூ.ஆயிரத்து 500 என கல்லூரி வரையிலும், ஆண் குழந்தைகளுக்கு பதினோறாம் வகுப்பில் இருந்தும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடி வாங்கவும், நிதிஉதவி அளிக்கப்படும். இதற்காக கல்வி உதவித்தொகை கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை.உடனே வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பாரதிய நகைத் தொழிலாளர் சங்க சாத்தான்குளம் நகர பொறுப்பாளர் மூக்காண்டி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.


