/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம்மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம்
மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம்
மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம்
மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : செப் 20, 2011 11:43 PM
பொங்கலூர் : வட கிழக்கு பருவ மழை சீசன் துவங்கியும், குறைவான மழையே பெய்துள்ளதால், பொங்கலூர் பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வட கிழக்கு பருவ மழை வழக்கமாக செப்., மாதம் துவங்கி டிச., வரை நீடிக்கும். செப்., மாதத்தில் பெய்யும் மழையை நம்பி, விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சோளம், கம்பு போன்ற மாட்டுத்தீவன பயிர்களையும், கொள்ளு, உளுந்து, தட்டை உள்ளிட்ட பயிர் வகைகளையும் சாகுபடி செய்வர். நல்ல மழை பெய்தால், கால்நடைகளுக்கு தேவையான புல் வகைகள் வளர்ந்து தீவனப்பற்றாக்குறை நீங்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். பருவ மழை துவங்குவதற்கான அறிகுறியே இல்லாமல் இருப்பதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.