/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சாலை சீரமைப்பு, பஸ் வசதி கோரி ஒலக்கூர் தே.மு.தி.க., தீர்மானம்சாலை சீரமைப்பு, பஸ் வசதி கோரி ஒலக்கூர் தே.மு.தி.க., தீர்மானம்
சாலை சீரமைப்பு, பஸ் வசதி கோரி ஒலக்கூர் தே.மு.தி.க., தீர்மானம்
சாலை சீரமைப்பு, பஸ் வசதி கோரி ஒலக்கூர் தே.மு.தி.க., தீர்மானம்
சாலை சீரமைப்பு, பஸ் வசதி கோரி ஒலக்கூர் தே.மு.தி.க., தீர்மானம்
ADDED : ஜூலை 11, 2011 11:21 PM
திண்டிவனம் : ஒலக்கூர் ஒன்றிய தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் மேல்பேட்டை கிராம சமுதாய கூடத்தில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் காதர் பாஷா, பேச்சாளர் வைர புரட்சிதாசன் உட்பட பலர் பேசினர். ஒன்றிய நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணன், சரவணன், கண்ணப்பன், ஆறுமுகம், செந்தில்முருகன், பிரபாகரன், முத்துகிருஷ்ணன், கண்ணன், அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒலக்கூர் ஒன்றியம் கீழ்பூதேரி, கீழ் நெமிலி, தென்னம்பூண்டி, குண்ணப்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு சாலையை சீரமைத்து பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். வெள்ளிமேடுப்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.