காஞ்சிபுரம்:டாஸ்மாக் மேலா ளரை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.வெள்ளைகுளம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை மேலாளராக முருகன், 36, வேலை செய்து வருகிறார்.
நேற்று கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, வெங்கடேசன், 36, டாஸ்மாக் கடைக்கு வந்து கடனுக்கு சரக்கு கேட்டுள்ளார். முருகன் மறுத்ததால், ஆத்திரமடைந்த வெங்கடேசன் அவரை தாக்கினார். சிவகாஞ்சி போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர்.


