வி.ஏ.ஓ.,க்களுக்கு நில அளவிட பயிற்சி
வி.ஏ.ஓ.,க்களுக்கு நில அளவிட பயிற்சி
வி.ஏ.ஓ.,க்களுக்கு நில அளவிட பயிற்சி
ADDED : ஜூலை 13, 2011 01:42 AM
கடலூர் : கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள்
80 பேருக்கு நில அளவை பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. தமிழகத்தில் கிராம
நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர்களில் நில அளவை பயிற்சி
பெறாதவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர்,
விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 80 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு
கடலூரில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
பயிற்சி வகுப்பில் நில அளவிடும் முறை மற்றும் நிர்வாகம் குறித்து நில
அளவைத் துறை சார் ஆய்வாளர் ராஜரத்தினம் மற்றும் அதிகாரிகள் பயிற்சி அளித்து
வருகின்றனர். கடந்த 4ம் தேதி துவங்கிய இப்பயிற்சி வரும் ஆகஸ்ட் 2ம் தேதி
முடிவடைகிறது. அதன்பிறகு பயிற்சி தேர்வு நடக்கிறது.