/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலத்தில் நீச்சல் பயிற்சி பள்ளி அமைக்க வலியுறுத்தல்குற்றாலத்தில் நீச்சல் பயிற்சி பள்ளி அமைக்க வலியுறுத்தல்
குற்றாலத்தில் நீச்சல் பயிற்சி பள்ளி அமைக்க வலியுறுத்தல்
குற்றாலத்தில் நீச்சல் பயிற்சி பள்ளி அமைக்க வலியுறுத்தல்
குற்றாலத்தில் நீச்சல் பயிற்சி பள்ளி அமைக்க வலியுறுத்தல்
குற்றாலம் : குற்றாலத்தில் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி நீச்சல் பயிற்சி பள்ளி அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு உடல் வலிமையும், திறமையும், ஓரளவு பணமும் தேவை என்பதாலோ என்னவோ. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 18 மாவட்டங்களில் 32 இடங்களில் நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் ஆர்வமுள்ள வீரர்கள் இணைந்து பயிற்சி பெறலாம். இதில் ஆர்வமிருக்கும் எல்லா மாணவ, மாணவிகளுக்கும் இலவச பயிற்சி அளிப்பதில்லை என கூறப்படுகிறது. பணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
வசதியுள்ள மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் நிறைய செலவழித்து ஏற்ற உணவு, அதிக பயிற்சி, கோச், ஜிம் என சகல வசதிகளுடன் வீரர்களை உருவாக்குகின்றனர். ஆனால் ஏழை எளிய மாணவ, மணவிகள் நீச்சல் பயிற்சி பெற இயலவில்லை. அதிலும் சில நீச்சல் குளங்களில் ஜிம் வசதி கிடையாது. இந்த விளையாட்டில் வெற்றிபெற உடல் திறன் மிகவும் அவசியம்.
தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி குற்றாலத்தில் நீச்சல்குளம் டவுன் பஞ்., மூலம் பராமரிக்கப்பட்டு சிறப்பாக உள்ளது. சுற்று வட்டார மாணவ, மாணவிகள் பலர் நீச்சல் நன்றாக தெரிந்தும் போதிய பயிற்சியின்றி காணப்படுவதால் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே தற்போது குற்றாலம் நீச்சல் குளம் வளாகத்தில் ஏழை எளிய மாணவ, மாணவிகள் நலன் கருதி நீச்சல் பயிற்சி பள்ளி ஒன்றை திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.