/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வன உயிரின வார விழா: மாணவர்களுக்கு போட்டிவன உயிரின வார விழா: மாணவர்களுக்கு போட்டி
வன உயிரின வார விழா: மாணவர்களுக்கு போட்டி
வன உயிரின வார விழா: மாணவர்களுக்கு போட்டி
வன உயிரின வார விழா: மாணவர்களுக்கு போட்டி
ADDED : செப் 20, 2011 11:43 PM
ஆனைமலை : வன உயிரின வார விழா அக்டோபர் மாதம் முதல் வாரத்தில்
கொண்டாடப்படுவதால் மாணவர்களுக்கு வன உயிரினங்கள் தொடர்பான போட்டிகள்
நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வன உயிரின வார விழா வனத்துறை சார்பாக
நடத்தப்படுவது வழக்கம். வன உயிரின வாரவிழா கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு
வனம் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு போட்டிகள்
நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பொள்ளாச்சியில் மாவட்ட வன அலுவலர்
மற்றும் துணை இயக்குனர், பொள்ளாச்சி வனக்கோட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம்,
பொள்ளாச்சி அலுவலகம் புதியதாக துவக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டம் சார்பாக
பொள்ளாச்சி, வால்பாறை தாலுகாவை சேர்ந்த அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும்
போட்டிகள் நடைபெற உள்ளது. நடைபெறும் இடங்கள் மற்றும் நாட்கள்: வரும் 25ம்
தேதி பொள்ளாச்சி ,வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு
ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நாச்சியார் வித்யாலயம்
பள்ளி ஜமீன் ஊத்துக்குளியில் நடைபெற உள்ளது. வரும் 30ம் தேதி பொள்ளாச்சி,
வால்பாறை தாலுகாவிற்கு வினாடிவினா போட்டிகள் திவான்சாபுதூர் கிருஷ்ணா
வித்யாலயா பள்ளியில் நடைபெற உள்ளது.
அனைத்து பள்ளி,கல்லூரி முதல்வர்களும், ஆசிரியர்களும் மாணவர்களை தேர்வு
செய்து வரும் 23ம் தேதிக்குள் தேர்வு செய்த மாணவர்களின் பட்டியலை மேற்கண்ட
பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விபரங்களுக்கு 04259-235385,
94439-13913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ஆனைமலை புலிகள்
காப்பகம் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் தியாகராஜன்
தெரிவித்தார்.