/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கே.டி.சி நகர் பகுதியில் மயான பாதை ஆக்ரமிப்புநடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம்கே.டி.சி நகர் பகுதியில் மயான பாதை ஆக்ரமிப்புநடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம்
கே.டி.சி நகர் பகுதியில் மயான பாதை ஆக்ரமிப்புநடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம்
கே.டி.சி நகர் பகுதியில் மயான பாதை ஆக்ரமிப்புநடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம்
கே.டி.சி நகர் பகுதியில் மயான பாதை ஆக்ரமிப்புநடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம்
திருநெல்வேலி:கே.டி.சி நகர் பகுதியில் மயான பாதை ஆக்ரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று எம்.பி ராமசுப்பு தெரிவித்தார்.கே.டி.சி நகர் வட பகுதி மங்கம்மாள் சாலையில் நபார்டு பாங்க் நிதி உதவி திட்டத்தின் கீழ் 61 லட்சம் செலவில் சாலை பணிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக நெல்லை எம்.பியிடம் புகார் தெரிவிக்கப்பட்டதின் பேரில் கே.டி.சி நகர் மங்கம்மாள் சாலை, மயான பாதை ஆகிய பகுதிகளை எம்.பி ராமசுப்பு மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.இதுகுறித்து எம்.பி கூறும் போது, 'சாலை பணிகளை உடனடியாக தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், பொது மயான பாதையை ஆக்ரமித்துள்ள வீட்டு வசதி வாரியம் உடனடியாக அதனை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். இல்லையெனில் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.இதில் பாளை பி.டி.ஓ தேவிகா, காங்., நிர்வாகிகள் முருகேசன், சுப்பிரமணியன், சரவணன், கீழநத்தம் வட பகுதி பொது நல சங்க தலைவர் முத்தையா, செயலாளர் முகம்மது நாசர், உறுப்பிதனரகள் ராமலிங்கம், ராமமூர்த்தி, சுந்தர்ராஜ், சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.