/உள்ளூர் செய்திகள்/சென்னை/மக்கள் குறைகேட்பில் மனு 909 பேருக்கு நலத்திட்ட உதவிமக்கள் குறைகேட்பில் மனு 909 பேருக்கு நலத்திட்ட உதவி
மக்கள் குறைகேட்பில் மனு 909 பேருக்கு நலத்திட்ட உதவி
மக்கள் குறைகேட்பில் மனு 909 பேருக்கு நலத்திட்ட உதவி
மக்கள் குறைகேட்பில் மனு 909 பேருக்கு நலத்திட்ட உதவி
ADDED : செப் 22, 2011 12:24 AM
சென்னை : மக்கள் குறைகேட்பில் மனு செய்த திருவொற்றியூர் தொகுதி வாசிகள், 909 பேருக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ரமணா வழங்கினார்.
திருவொற்றியூர் நகராட்சியில், இரண்டு மாதங்களுக்கு முன், மக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது,. இதில் 2,000த்துக்கும் மேற்பட்டோர் மனு கொடுத்திருந்தனர். இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, முதற்கட்டமாக, 909 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, திருவொற்றியூர் நகராட்சியில் நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ., குப்பன் தலைமை வகித்தார். கைத்தறித்துறை அமைச்சர் ரமணா பங்கேற்று, முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் 721 பேருக்கு, மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகைக்கான ஆணையை வழங்கி பேசினார்.
சமூக நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில், 39 பேருக்கு பல்வேறு உதவித்தொகையும், மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில், 23 பேருக்கு மூன்று சக்கர வண்டிகள், 75 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளும் வழங்கப்பட்டன. குப்பன் எம்.எல்.ஏ., கூறும்போது,'மக்கள் குறைகேட்பு முகாமில் வந்த மனுக்கள் ஆய்வு செய்து, இரண்டு மாதத்தில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக வழங்கப்படும்' என்றார்.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி, நகராட்சி கமிஷனர் கலைச் செல்வன், சமூக நல அலுவலர் ரூத்வெண்ணிலா மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.