Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நெசவியல் பயிற்சி ஆக., 1ல் ஆரம்பம்

நெசவியல் பயிற்சி ஆக., 1ல் ஆரம்பம்

நெசவியல் பயிற்சி ஆக., 1ல் ஆரம்பம்

நெசவியல் பயிற்சி ஆக., 1ல் ஆரம்பம்

ADDED : ஜூலை 28, 2011 03:07 AM


Google News
ஈரோடு: சூரம்பட்டி விசைத்தறி சேவை மையத்தில் நெசவியல் தொழில்நுட்ப பயிற்சி ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது.ஈரோடு மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இம்மைய உதவி இயக்குனர் குமரவேல் அறிக்கை:ஈரோடு விசைத்தறி சேவை மையத்தின் 114வது பயிற்சி முகாம் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது.

சாதா தறி, ட்ராபாக்ஸ் தறி, டாபி தறி, ஜக்கார்டு தறி, டெர்ரிடவல், லஷ்மி ரூட்டி 'சி' ஆட்டோமேடிக் தறி, நாடா இல்லாத சுல்சர் புரஜக்டைல் தறி, ஏர்ஜெட் தறி ஆகியவை உள்ளன. மையத்தில் திறமையான தொழிநுட்ப அலுவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாத நெசவியல், வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு, நாடா இல்லாத சுல்சர் புரஜக்டைல் தறியில் இரண்டு வாரம் பயிற்சி அளிக்கப்படும்.முதல் பயிற்சிக்கு 552 ரூபாயும், சேவை வரி 500 ரூபாய் உட்பட கட்டணம் வசூலிக்கப்படும். இரண்டாம் பயிற்சிக்கு 1,103 ரூபாயும், சேவை வரி ஆயிரம் ரூபாய் உட்பட கட்டணம் வசூல் செய்யப்படும். கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி. 2011 ஜூலை 31ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஒரு மாத பயிற்சி தினசரி காலை 9.45 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது.இரண்டு வார பயிற்சி தினசரி மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us