ADDED : செப் 26, 2011 11:45 PM
அரூர் : அரூர் அருகே ஏரியில் களிமண் கடத்திய இருவரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி அடுத்த கம்மாளப்பட்டியில் உள்ள ஏரியில் செங்கல் சூளைக்கு திருட்டுத்தனமாக டிராக்டரில் களிமண் கடத்தப்படுவதாக, எல்லப்புடையாம்பட்டியை சேர்ந்த வி.ஏ.ஓ., ராஜேந்திரனுக்கு கிடைத்த தகவலையடுத்து, உதவியாளர் ஏகநாதன், ஆர்.ஐ., சச்சிதானந்தம் ஆகியோர் ஏரிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது, ஏரியிலிருந்து களிமண் லோடு ஏற்றிவந்த டிராக்டரை நிறுத்தினர். டிராக்டர் நிற்காமல் வேகமாக சென்றதையடுத்து, அதிகாரிகள் அப்பகுதியினர் உதவியுடன் மடக்கி பிடித்து கடத்தூர் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், அரூர் புறாக்கல்லை சேர்ந்த டிராடக்டர் டிரைவர்கள் திருப்பதி (24), கோவிந்தசாமி (42) ஆகிய இருவர் திருட்டுத்தனமாக அடிக்கடி களிமண் கடத்துவது தெரிந்தது. அவர்களிடமிருந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.