/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/திப்பம்பட்டியில் மனுநீதிநாள் முகாம்திப்பம்பட்டியில் மனுநீதிநாள் முகாம்
திப்பம்பட்டியில் மனுநீதிநாள் முகாம்
திப்பம்பட்டியில் மனுநீதிநாள் முகாம்
திப்பம்பட்டியில் மனுநீதிநாள் முகாம்
ADDED : ஜூலை 26, 2011 09:42 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டியில் இன்று மனுநீதிநாள் முகாம் நடக்கிறது.பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி வெளியிட்ட அறிக்கை: பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட திப்பம்பட்டி கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இன்று (27ம் தேதி) மனு நீதிநாள் முகாம் நடக்கிறது.
முகாமில் பொள்ளாச்சி எம்.பி., சுகுமார், உடுமலை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். முகாமில் திப்பம்பட்டி, கொள்ளுப்பாளையம் கிராம மக்கள் கலந்து கொண்டு குறைகள் குறித்து மனு கொடுக்கலாம். அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்வதால், மனுநீதிநாளில் உடனடி நிவாரணம் வழங்கப்படுகிறது. தொண்டாமுத்தூர் கிராமத்தில் வரும் ஆக., 20ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடக்கிறது. அந்த முகாமிற்கு தொண்டாமுத்தூர் கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தில் பொள்ளாச்சி தாசில்தாரால் மனுக்கள் பெறப்படுகிறது. தொண்டாமுத்தூர், தளவாய்பாளையம், கரட்டுப்பாளையம் மற்றும் நல்லூர் கிராம மக்கள் சிறப்பு மனு நீதி நாளில் நிவாரணம் பெற மனுக்கள் கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.