Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளிபெசாகஸ் போட்டியில் சாதனை

அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளிபெசாகஸ் போட்டியில் சாதனை

அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளிபெசாகஸ் போட்டியில் சாதனை

அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளிபெசாகஸ் போட்டியில் சாதனை

ADDED : ஜூலை 30, 2011 02:15 AM


Google News
விக்கிரமசிங்கபுரம்:பெகாசஸ்-2011 போட்டிகளில் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளி முதலிடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.நெல்லை மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் இலஞ்சி பாரத் மாணடிச்சோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அபிநயா கதை கூறல், உதிரம் இசைப்படால், ஆண்டோமேரி ஜெனோவா, ஜாஸ்பர், கிளிபோர்டுமோசஸ், அஜித், விக்னேஷ் ஆகியோர் இன்னிசை கச்சேரியில் முதல் பரிசை பெற்றனர்.சாய்பவித்ரா, சங்கீதா, மெர்சிகோல்டா, வினுப்பிரியா, மனீஷா, பினுபியர்லஸி, ஷெர்லின், ஞானகிருபா ஆகியோர் குழுநடன போட்டியில் வெற்றி பெற்றனர். ஆப்ரின்சபானா உடை அலங்காரம், அபினேஷ் வண்ணம் தீட்டுதல், எபிஜோஸ்வா அழகு, கவிதா தமிழ்பேச்சு, முத்துராஜ் ஆங்கில கட்டுரை எழுதுதல், குருபிரியதர்ஷினி வாசித்தல் திறன் போட்டிகளில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றனர்.

ஒட்டியும், வெட்டியும் பேசுதலில் சொப்னா ரூத்மேரி, தனிநபர் நடனத்தில் லதாஷா, மாதிரி செய்முறை ஹெப்ஸிபா, அல்டாப்ரஹ்மான், செல்வகுமார், ஸ்பெல்பீ போட்டியில் சஜிதாகாசம் ஆகியோர் மூன்றாமிடத்தில் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. டாக்டர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் காந்தி, தாளாளர் மோகனகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் சாதனை படைத்த அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளிக்கு முதல் பரிசுக்கான பெகாசஸ் கேடயம் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களையும், அதற்காக உழைத்த பள்ளி ஆசிரியர்களையும் பள்ளி முதல்வர் ஆனிமேரிமெட்டில்டா, தாளார் ராபர்ட்பெல்லார்மின் ஆகியோர் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us