/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கடையநல்லூர் பகுதியில்விஜயகாந்த் பிறந்த நாள்கடையநல்லூர் பகுதியில்விஜயகாந்த் பிறந்த நாள்
கடையநல்லூர் பகுதியில்விஜயகாந்த் பிறந்த நாள்
கடையநல்லூர் பகுதியில்விஜயகாந்த் பிறந்த நாள்
கடையநல்லூர் பகுதியில்விஜயகாந்த் பிறந்த நாள்
ADDED : ஆக 26, 2011 01:35 AM
கடையநல்லூர்:கடையநல்லூர் பகுதிகளில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்
பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை
பொதுக்குழு உறுப்பினருமான திருப்பதி, மாவட்ட துணை செயலாளர் இன்பராஜ்,
முன்னாள் ஒன்றிய செயலாளர் காசிதர்மம் குமார் மற்றும் தேமுதிகவினர்
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததானம்
வழங்கினர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கொடியேற்றி பொதுமக்களுக்கு
இனிப்புகளை வழங்கினர்.கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நகர செயலாளர் சரவணன்
தலைமையில் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், மாவட்ட கேப்டன் மன்ற துணை
செயலாளர் சாந்தி ராமச்சந்திரன், மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் முருகன்
முன்னிலையில் கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், முத்துகிருஷ்ணாபுரம்,
மேலக்கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியேற்றி இனிப்புகள்
வழங்கப்பட்டது.
கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோயிலில் விஜயகாந்த் பிறந்தநாளை
முன்னிட்டு தேமுதிக சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில்
கடையநல்லூர் நகர தேமுதிக அவைத்தலைவர் அப்துல்காதிர், போத்திராசு,
வேல்முருகன், முகம்மது இப்ராகிம்அலி, மாரி, அப்துல்லா மற்றும் வார்டு
நிர்வாகிகள் உட்பட தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.கடையநல்லூர் ஒன்றிய
தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா
கொண்டாடப்பட்டது. சொக்கம்பட்டி, திரிகூடபுரம், சிங்கிலிபட்டி, நயினாரகரம்,
சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி, ஊர்மேலழகியான், வேலாயுதபுரம், பொய்கை,
கள்ளம்புளி, ரெட்டைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக கட்சி கொடிகள்
ஏற்றப்பட்டது.ஒன்றிய தேமுதிக பொறுப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய பொருளாளர்
சுந்தர்ராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் வள்ளிநாயகம், அய்யனார், முன்னாள்
தொகுதி பொறுப்பாளர் குருசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவசுப்பிரமணியன்,
ஒன்றிய கேப்டன் மன்ற துணை செயலாளர் முருகன், கேப்டன் மன்ற செயலாளர்
மணிகண்டன், லிங்கசாமி, சமுத்திரக்கனி, பரமசிவன், கருப்பசாமி உள்ளிட்ட
தேமுதிக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.