Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பக்கவாத்தியம்/பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்

PUBLISHED ON : ஜூலை 27, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

'பயங்கரவாதம் குறையலையே...!'



அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். உழைக்கும் பெண்கள் அமைப்பு, கலாஷேத்ரா போன்றவற்றின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.அமெரிக்க தூதரகத்தால், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசியபோது, 'ஆசிய நாடுகளை பயங்கரவாதம் இல்லாத மண்டலமாக மாற்றுவதே எங்கள் லட்சியம். ஆப்கானிஸ்தானில், பயங்கரவாதத்தால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. அதை மாற்ற, அமெரிக்க கூட்டுப்படை ஆப்கனில் முகாமிட்டது. வரும் 2014க்குள், பயங்கரவாத நடவடிக்கைகளை அடியோடு ஒழித்து, அங்கிருந்து கூட்டுப் படைகள் வாபஸ் பெறப்படும்' என்றார்.இதைக் கேட்டு வெளியே வந்த பார்வையாளர் ஒருவர், 'ஆப்கனுக்கு இவங்க வந்து பல வருஷமாச்சு, படைகளும் குறையலை... பயங்கரவாதமும் குறையலை...' என, 'கமென்ட்' அடித்தபடியே நகர்ந்தார்.



'அருவான்னா மதுரையா...?'



மதுரையில் தொல்லியல் கழகம் சார்பில் நடந்த கருத்தரங்கில், பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசினார். அவர் பேசும்போது, 'சினிமாக்களில் அரிவாளை எடுத்துக் கொண்டு ஓடும் காட்சி இருந்தால், அது மதுரை என்ற அளவுக்கு நம்மூரை காட்டுகின்றனர். ஒருமுறை சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறச் சென்றபோது, ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு சென்றோம். நான் தற்செயலாக பின்னால் கையை கொண்டு சென்றதை பார்த்து, ஏதோ அரிவாளை எடுக்கப் போகிறேன் என்று நினைத்து, 'மன்னிச்சிடுங்க...' என்றார். இப்படி இருந்தால் எப்படி சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருவர்' என்றார்.இதைக் கேட்ட சென்னை பார்வையாளர் ஒருவர், 'எல்லாம் மதுரையிலிருந்து வந்து, சினிமா எடுக்கறவங்க செய்ற வேல... அவங்களப் பாத்து இவர் பேச வேண்டியது தானே...' எனச் சொல்லி, 'உச்' கொட்டினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us