Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/காங்., மேயர் வேட்பாளர் ஓட்டு கேட்டு பிரச்சாரம்

காங்., மேயர் வேட்பாளர் ஓட்டு கேட்டு பிரச்சாரம்

காங்., மேயர் வேட்பாளர் ஓட்டு கேட்டு பிரச்சாரம்

காங்., மேயர் வேட்பாளர் ஓட்டு கேட்டு பிரச்சாரம்

ADDED : அக் 06, 2011 02:17 AM


Google News
சேலம்: சேலம் மாநகர காங்கிரஸ் மேயர் வேட்பாளர் விஜயவர்மன் அஸ்தம்பட்டி பகுதியில் இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் சேர்ந்து தீவிர பிரச்சாரம் செய்தார்.

சேலம் மாநகர காங்கிரஸ் மேயர் வேட்பாளர் விஜயவர்மன், அம்மாபேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட, ஒன்பதாவது வார்டில் அல்லிகுட்டை என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.

ஒன்பதாவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கம், மாநகர தலைவர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் பாஸ்கர், மாநகர பொருளாளர் ரவிவர்மா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். திறந்த ஜீப்பில் சென்று வேட்பாளர் விஜயவர்மன் ஓட்டு சேகரித்தார். மேலும், அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உட்பட்ட 12வது வார்டு காங்., வேட்பாளர் செல்லராணி, 13வது வார்டு வேட்பாளர் தினகரன் ஆகியோரும் மேயர் வேட்பாளருடன் சேர்ந்து ஓட்டு சேகரித்தனர்.

காங்., பொதுச்செயலாளர் தனசேகர், மாணவர் காங்., தலைவர் சுரேஷ், இளைஞர் காங்., வடக்கு பொதுச்செயலாளர் ராஜகோபால், அர்த்தனாரி மற்றும் அப்பு விஜயகுமார், பொதுச்செயலாளர் கோபிகுமரன் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் ஓட்டு சேகரித்தனர்.

நேற்று முன்தினம் அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உட்பட்ட 14வது வார்டில், எல்லைபிடாரியம்மன் கோவிலில் பூஜையை முடித்து விட்டு பிரச்சாரத்தை துவக்கினார். மாநகர் மாவட்ட காங்., பொருளாளர் ரவிவர்மா வரவேற்றார். 14வது வார்டு காங்., வேட்பாளர் இளங்கோ, மேயர் வேட்பாளர் அவருடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 15, 16வது வார்டுக்குரிய வீதிகளில் நடந்து சென்று வீடு வீடாக ஓட்டு வேட்டையாடினார். 15வது வார்டு வேட்பாளர் மாதேஸ்வரன், 16வது வார்டு வேட்பாளர் ஜெகன்னா ஆகியோரும் ஓட்டு சேகரித்தனர்.

தொடர்ந்து, 5, 6, 7வது வார்டுக்குரிய அழகாபுரம் புதூர், ஏடிசி நகர், கோரிமேடு, என்.ஜி.ஜி.ஓ., காலனி, ஹவுஸிங் போர்டு, திருநகர் ஆகிய இடங்களிலும் மேயர் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டார். டிவிசன் தலைவர்கள் ரவிச்சந்திரன், செல்வம், கந்தசாமி, இளைஞர் காங்., மோகன், டிவிசனல் இளைஞர் காங்., நிர்வாகி காமராஜ், வடக்கு பிரதிநிதி ஜெயபிரகாஷ் கிருஷ்ணா, தெற்கு பிரதிநிதி ஸ்ரீரங்கன், கோபி குமரன், 20வது டிவிசன் கார்த்தி, கேரள மாநில முன்னாள் இளைஞர் காங்., தலைவர் லிச்சு, மாநில பொதுச்செயலாளர் மாத்யூ குழல்நாதன், பொதுச்செயலாளர் ஷிலாபுதீன் ஆகியோரும் ஓட்டு சேகரித்தனர். ஐந்தாவது வார்டு வேட்பாளர் சாந்திகுமாரசாமி, ஆறாவது வார்டு வேட்பாளர் கிருஷ்ணன், 7வது வார்டு வேட்பாளர் ரெஜினாதாஸ் ஆகியோர் காங்கிரஸுக்கு ஓட்டு போடும்படி பொதுமக்களிடம் வேண்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us