ADDED : செப் 16, 2011 12:13 AM
குளித்தலை: குளித்தலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., அமைப்பு மற்றும் ஜி 'டிவி' சார்பில் மரம் வளர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை பள்ளி தலைமையாசிரியர் காமினி தேவி கொடியசைத்து துவக்கி வைத்தார். என்.எஸ்.எஸ்., அலுவலர் சாமிநாதன், கம்ப்யூட்டர் ஆசிரியர் சரவணன், முதுகலை ஆசிரியர் ரவி வாழ்த்தி பேசினர். பேரணியில் 'வளர்ப்போம், வளர்ப்போம் மரங்களை வளர்ப்போம், காப்போம், காப்போம் சுற்றுச்சூழலை காப்போம்' என கோஷமிட்டப்படி மாணவர்கள் முக்கிய நகர வீதிகள் வழியாக சென்றனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் தட்சிணா மூர்த்தி செய்திருந்தார். சீனியர் மாணவர் ஜனார்த்தன் நன்றி கூறினார்.


