Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/"கரீப்' மக்காச்சோளம் லாபம் தரும்வேளாண்மை அதிகாரி அறிவுரை

"கரீப்' மக்காச்சோளம் லாபம் தரும்வேளாண்மை அதிகாரி அறிவுரை

"கரீப்' மக்காச்சோளம் லாபம் தரும்வேளாண்மை அதிகாரி அறிவுரை

"கரீப்' மக்காச்சோளம் லாபம் தரும்வேளாண்மை அதிகாரி அறிவுரை

ADDED : ஆக 22, 2011 02:31 AM


Google News
திருநெல்வேலி:கரீப் பருவத்தில் மக்காச்சோளம் பயிரிட்டால் லாபம் கிடைக்கும் என வேளாண்ணை துணை இயக்குனர் தெரிவித்தார்.நெல்லை வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) தியாகராஜன் அறிக்கை:மக்காச்சோளத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியதால் குவின்டாலுக்கு 980 ரூபாய் அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மக்காச்சோளத்திற்கு குவின்டாலுக்கு 1,250 ரூபாய் கிடைக்கிறது.கரீப் பருவத்தில் மக்காச்சோளம் பயிரிட வசதியாக தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் ஆய்வு மேற்கொண்டது. கரீப் பருவத்தில் அறுவடையின் போது நவம்பர், டிசம்பரில் மக்காச்சோளத்தின் விலை குவின்டாலுக்கு 980 முதல் 1,150 ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது.விவசாயிகள் கரீப் பருவத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு லாபம் பெறலாம்.இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us