/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மனைவியின் கள்ளக்காதலனை கொன்றவருக்கு ஆயுள் சிறைமனைவியின் கள்ளக்காதலனை கொன்றவருக்கு ஆயுள் சிறை
மனைவியின் கள்ளக்காதலனை கொன்றவருக்கு ஆயுள் சிறை
மனைவியின் கள்ளக்காதலனை கொன்றவருக்கு ஆயுள் சிறை
மனைவியின் கள்ளக்காதலனை கொன்றவருக்கு ஆயுள் சிறை
ADDED : ஆக 01, 2011 10:42 PM
கோவை : மனைவியின் கள்ளக்காதலனை, சலூனுக்குள் வெட்டிக் கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு, கோவை முதலாவது விரைவுக் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.
ஆனைமலை அருகேயுள்ள ஒடையகுளத்தைச் சேர்ந்தவர் ராஜன் (34); கூலித்தொழிலாளி. இவரது மனைவி மேரி (28). தினமும் மது போதையில் வீட்டுக்கு வரும் இவர், மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். அடிக்கடி வீட்டுக்கு வரும் குடும்ப நண்பர் சிவராஜ் (34), கணவரின் துன்புறுத்தல் காரணமாக வேதனையில் இருந்த மேரிக்கு ஆறுதல் கூறினார். இது நாளடைவில், இவர்களுக்குள் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தியது. 2004, செப்.,மாதம் இருவரும் ஊரை விட்டு ஓடிவிட்டனர்.
சில நாட்களுக்குப் பின், ஊர் திரும்பிய கள்ளக் காதலர்களை பிரித்த ஊர்மக்கள், மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேரி, கணவனுடன் செல்ல மறுத்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், 2004, அக்.,2 அன்று மாலை, ஆனைமலை மெயின் ரோட்டில் உள்ள பாலன் சலூனில் சிவராஜ் உட்கார்ந்திருந்தார். அச்சமயம் அங்கு வந்த ராஜன், தன்னையும், மனைவியையும் பிரித்த மனைவியின் கள்ளக்காதலனை பார்த்து ஆத்திரமடைந்தார். மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில்,படுகாயமடைந்த சிவராஜ் சலூனுக்குள் பிணமானார். தடுக்க வந்த முருகானந்தம், செல்வராஜ் ஆகியோரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். ஆனைமலை போலீசார் விசாரித்து,ராஜனை கைது செய்தனர். வழக்கு, கோவை முதலாவது விரைவு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் அகஸ்டஸ் ஆஜரானார். நீதிபதி ராமமூர்த்தி வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி ராஜனுக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.