/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி குளத்தை முற்றுகையிடும்செங்காய் நாரைகள் கூட்டம்தென்காசி குளத்தை முற்றுகையிடும்செங்காய் நாரைகள் கூட்டம்
தென்காசி குளத்தை முற்றுகையிடும்செங்காய் நாரைகள் கூட்டம்
தென்காசி குளத்தை முற்றுகையிடும்செங்காய் நாரைகள் கூட்டம்
தென்காசி குளத்தை முற்றுகையிடும்செங்காய் நாரைகள் கூட்டம்
ADDED : ஜூலை 30, 2011 02:14 AM
தென்காசி:தென்காசி சீவலப்பேரி குளத்தை செங்காய் நாரைகள் கூட்டம்
முற்றுகையிட்டுள்ளது.குற்றாலத்தில் சீசன் துவங்கி விட்டால் சிற்றாறு,
செங்கோட்டை குண்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
இதனால் இவற்றின்
மூலம் பாசனம் பெறும் குளங்களிலும் தண்ணீர் நிரம்பி காணப்படும். இந்த ஆண்டு
சீசன் கடந்த ஒரு மாத காலமாக அருமையாக இருந்தாலும் ஒரு சில குளங்கள் மட்டுமே
நிரம்பியுள்ளன. பல குளங்கள் தண்ணீர் வரத்து இல்லாமல்
காணப்படுகிறது.தென்காசி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே சீவலப்பேரி குளம் உள்ளது.
இக்குளத்திற்கு குண்டாற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வரும். சீசன்
காலத்தில் நிரம்பி காணப்படும் இக்குளம் தற்போது போதிய தண்ணீர் இன்றி
உள்ளது. இக்குளத்திற்கு ஆண்டு தோறும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி
மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வகையான பறவைகள் வருவது உண்டு. இந்த ஆண்டு
தண்ணீர் நிரம்பாமல் இக்குளம் இருந்தாலும் பறவைகள் வரவு
துவங்கியுள்ளது.தற்போது செங்காய் நாரைகள் சீவலப்பேரி குளத்தை
முற்றுகையிட்டுள்ளன. இக்குளத்தில் அதிகளவில் செங்காய் நாரைகள்
காணப்படுகிறது. இவை குளத்தில் கிடக்கும் குறைந்தளவு தண்ணீரில் நடந்து
சென்றே மீன்கள், நண்டுகள், தவளைகள் உள்ளிட்டவைகளை பிடித்து உணவாக
உட்கொள்கிறது. தண்ணீர் நிரம்பி கிடந்தால் தண்ணீரில் நீந்தி சென்றே இவை உணவு
வேட்டையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.கொக்கு போன்ற அமைப்புடைய இந்த
செங்காய் நாரைகளை திரளானோர் பார்த்து செல்கின்றனர்.