ADDED : ஜூலை 13, 2011 02:47 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில் ஆனிவிழா தேரோட்டம்
நடந்தது.கோயில் வாசலில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சுவாமியும்,
சிறிய தேரில் அம்மனும் வீற்றிருக்க தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர்.
பெரிய தேரை ஆண்களும், பெண்களும் இழுத்தனர். சிறிய தேரை பெண்கள் மட்டும்
இழுத்தனர். 11.40 மணிக்கு தேர்கள் நிலைக்கு வந்தன. சுவாமி, அம்மனுக்கு
சிறப்பு தீபாரதனைகள் நடந்தன. ராஜபாளையம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன்
இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி வேல்முருகன் மற்றும்
ஊழியர்கள் செய்திருந்தனர்.


