/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கரிமூட்டம், செங்கல்சூளைக்கு பயன்படும் காவிரி குடிநீர்: தாகத்தில் தவிக்கும் மக்கள்கரிமூட்டம், செங்கல்சூளைக்கு பயன்படும் காவிரி குடிநீர்: தாகத்தில் தவிக்கும் மக்கள்
கரிமூட்டம், செங்கல்சூளைக்கு பயன்படும் காவிரி குடிநீர்: தாகத்தில் தவிக்கும் மக்கள்
கரிமூட்டம், செங்கல்சூளைக்கு பயன்படும் காவிரி குடிநீர்: தாகத்தில் தவிக்கும் மக்கள்
கரிமூட்டம், செங்கல்சூளைக்கு பயன்படும் காவிரி குடிநீர்: தாகத்தில் தவிக்கும் மக்கள்
ADDED : ஜூலை 25, 2011 09:55 PM
சாயல்குடி : கரிமூட்டத்திற்கும், செங்கல் சூளைக்கும் காவிரி குடிநீர் பயன்படுத்தப்படுகிறது.
கிராம மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். ராமநாதபுரத்திற்கு பல கோடி ரூபாய் செலவில் காவிரி கூட்டுக்குடிநீர் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடு குறையத்தொடங்கியது. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், திட்டம் செயல்படத் தொடங்கியதிலிருந்து இன்று வரை குடிநீர் வினியோகம் போதிய அளவில் இல்லை.
வாலிநோக்கம் விலக்கு, மலட்டாறு விலக்கு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாய்களையொட்டியே கரிமூட்டம், செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் குழாய்களில் இணைப்பு சரியாக இல்லை. இதிலிருந்து குடிநீர் வீணாகிறது. இதை குழி தோண்டி குடிநீரை தேக்கி வைத்து கரிமூட்டம், செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். கிராம மக்களுக்கு போதிய குடிநீர் கிடைப்பதில்லை. கிடைக்கும் குடிநீரும் மாசுப்பட்டதாகவே இருக்கிறது. நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். வீணாக்கப்படும் குடிநீரை மக்களுக்கு முழுஅளவில் வழங்க குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.