/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி தொகைநலிந்த வயோதிககலைஞர்களுக்குஅழைப்புமாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி தொகைநலிந்த வயோதிககலைஞர்களுக்குஅழைப்பு
மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி தொகைநலிந்த வயோதிககலைஞர்களுக்குஅழைப்பு
மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி தொகைநலிந்த வயோதிககலைஞர்களுக்குஅழைப்பு
மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி தொகைநலிந்த வயோதிககலைஞர்களுக்குஅழைப்பு
திருநெல்வேலி:நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயோதிக கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க நலிந்த கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.நலிந்த நிலையில் சிறந்த வயோதிக கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்க இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், கிராமிய கலைகள் மற்றும் ஓவியம், சிற்பம் ஆகிய கலைத் துறைகளில் குறிப்பிடத்தக்க சிறப்பு பணியாற்றி தற்போது 58 வயது நிறைவுற்ற அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடன் வறுமையில் நலிந்து வாழும் சிறந்த வயோதிக கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்ப படிவங்கள் சம்பந்தப்ப்டட கலை பண்பாட்டு மையத்தில் நேரிலோ அல்லது 10 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட உறையை அனுப்பி தபால் மூலமோ பேற்று கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தக்க ஆதாரங்களுடன் வருவாய்த் துறை, ஆர்.டி.ஓ பரிந்துரையுடன் தங்களது மாவட்டம் உள்ளடக்கிய மண்டல கலை பண்பாட்டு மையத்தில் வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ''உதவி இயக்குனர், நெல்லை கலை பண்பாட்டு மையம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் கட்டடம், 820 டிராக்டர் தெரு, அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு, நெல்லை - 7'' (டெலிபோன் 0462 - 2553890) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் 2009-10ம் ஆண்டில் விண்ணப்பம் செய்துள்ள கலைஞர்கள் தற்போது விண்ணப்பிக்க வேண்டாம் என்று நெல்லை கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் தெரிவித்தார்.