/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மின்தடையை சரிசெய்யமுடியாமல் இருளில் வசிக்கும் கிராமங்கள்மின்தடையை சரிசெய்யமுடியாமல் இருளில் வசிக்கும் கிராமங்கள்
மின்தடையை சரிசெய்யமுடியாமல் இருளில் வசிக்கும் கிராமங்கள்
மின்தடையை சரிசெய்யமுடியாமல் இருளில் வசிக்கும் கிராமங்கள்
மின்தடையை சரிசெய்யமுடியாமல் இருளில் வசிக்கும் கிராமங்கள்
கீழக்கரை : ராமநாதபுரம் மின்வாரியத்தில் அனுமதிக்கப்பட்ட 166 வயர்மேன்கள் பணியிடத்தில் ஆறு பேர் மட்டுமே உள்ளதால், கிராமப்புறங்களில் ஏற்படும் மின் பழுதை சரி செய்ய முடியாமல் மக்கள் நாள் கணக்கில் இருளில் தவிக்கின்றனர்.
இந்நிலையில் பதவி உயர்வு,மாறுதல்,பணி ஓய்வு போனற காரணங்களால் வயர்மேன்கள் பணியிடம் காலியாகிவிட்டது. தற்போது 166 வயர்மேன்கள் உள்ள இடத்தில் ஆறு பேர் மட்டும் உள்ளனர். இதனால் ஊராட்சிகளில் தெருவிளக்கு பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டு கிராமங்கள் பல நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது. சில கிராமங்களில் தனியார் மூலம் மின் கம்பங்களில் பழுதுநீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர்களிலும் தனியார் பணி செய்யும் நிலையால் விபத்து அபாயம் உள்ளது. தி.மு.க.,ஆட்சியில் காலியாக உள்ள வயர்மேன் பணியிடம் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு கண் துடைப்பாகி விட்டது. வயர்மேன் நியமிக்கும் வரை கூடுதலாக 150 மஸ்தூர் பணியாளர்களையாவது நியமிக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.,இந்த அவலநிலை குறித்து சட்டசபையில் குரல் எழுப்ப வேண்டும்.