ADDED : ஜூலை 19, 2011 12:16 AM
தர்மபுரி: பாலக்கோடு அருகே குடிக்க பணம் தர மறுத்த மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி காடுசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மல்லன் (35) இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்த மல்லன் குடிப்பதற்காக அவரது மனைவி சிட்டமாளிடம் கடந்த 26ம் தேதி இரவு பணம் கேட்டுள்ளார். பணம் தர சிட்டம்மாள் மறுத்ததால், ஆத்திரமடைந்த மல்லன் சிட்டம்மாள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். பலத்த தீக்காயம் அடைந்த சிட்டம்மாள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, நேற்று பரிதாபமாக இறந்தார். பஞ்சப்பள்ளி போலீஸார் விசாரித்து, மல்லனை கைது செய்தனர்.