ADDED : ஜூலை 25, 2011 09:56 PM
ராமேஸ்வரம் : தங்கச்சிமடம் வேர்க்கோடு புனித சந்தியாகப்பர் திருவிழா தேர்பவனி நடந்தது.
கடந்த 16 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவைத் தொடர்ந்து 9 நாட்களும் நவநாள் திருப்பலி பூஜை நடந்தது. முக்கிய திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் தேர்பவனி நடந்தது. தொடர்ந்து, மதுரை விரகனூர் பாதிரியார் ஆனந்தம் தலைமையில் நடந்த திருப்பலி பூஜையில் சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு அமல்ராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்ட முதன்மை குரு ஜோமிக்ஸ், பாதிரியார்கள் ஜேம்ஸ் அத்துவான்தாஸ் (சூசையப்பர்பட்டினம்), மைக்கில்ராஜ்(வேர்க்கோடு), சேசுராஜா(பாம்பன்), செங்கோல் வேதமாணிக்கம்(தங்கச்சிமடம்), டேவிட் குழந்தைநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஜவஹிருல்லா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, டி.எஸ்.பி.,மணிவண்ணன் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.