/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/40 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு40 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
40 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
40 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
40 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜூலை 26, 2011 09:33 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வேளாண்மை கல்வி நிறுவனத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் சந்தித்து, தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு கல்வி நிறுவனத்தில், கடந்த 1971-73 ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன், முன்னாள் மாணவர் சங்கக் கூடத்தில் சந்தித்து கொண்டனர். முதல்வர் சங்கரலிங்கம் வரவேற்றார். நிறுவனச் செயலாளர் சுவாமி தத்பிரபானந்தர் தலைமை வகித்து பேசுகையில், 'சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி, நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகள் குறித்து விளக்கினார்', வித்யாலய உதவி செயலாளர் சுவாமி நிர்மலேஷானந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய, முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த அனுபவங்களையும், ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் காட்டிய வழிகள் தங்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கு எவ்வாறு உதவியது எனவும் நினைவு கூர்ந்தனர். உதவி பேராசிரியர் சுகந்தராஜ் விழாவினை ஒருங்கிணைத்தார். நஞ்சையன் நன்றி கூறினார்.