/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு:மாணவர்களிடம் ஏற்படுத்த ஆர்.டி.ஓ., வலியுறுத்தல்போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு:மாணவர்களிடம் ஏற்படுத்த ஆர்.டி.ஓ., வலியுறுத்தல்
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு:மாணவர்களிடம் ஏற்படுத்த ஆர்.டி.ஓ., வலியுறுத்தல்
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு:மாணவர்களிடம் ஏற்படுத்த ஆர்.டி.ஓ., வலியுறுத்தல்
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு:மாணவர்களிடம் ஏற்படுத்த ஆர்.டி.ஓ., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 15, 2011 12:43 AM
கோபிசெட்டிபாளையம்: நம்பியூர் குமுதா கல்வி நிறுவனங்களின் 35ம் ஆண்டு விழா வக்கீல் சின்னசாமி தலைமையில் நடந்தது.
குமுதா கல்வி நிறுவன தாளாளர் ஜனகரத்தினம் வரவேற்றார். வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மாதத்தில் சராசரியாக வாகன விபத்துகளில் 40க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்படுகிறது. 70 சதவீதம் டூவீலர் விபத்தாக உள்ளன. வாகனங்களை இயக்கும் போதும், நடந்து செல்லும் போதும் விழிப்புடன் பயணிக்க வேண்டும். அனைவரும் சாலை விதிகள், சாலை கட்டுபாட்டுகளை தெரிந்து இருத்தல் அவசியமாகும். விட்டு கொடுத்து செல்லும் மனப்பான்மை தேவை. ஈகோ, அதிவேகம், கவன குறைவு போன்றவற்றால் விபத்து ஏற்படுகிறது. வாகனத்தில் செல்லும் போது ஹெல்மேட் அணிந்து செல்வது பாதுகாப்பாகும். மொபைல் ஃபோன் பேசியபடி, மது அருந்து விட்டு வாகன ஓட்டுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற துறைகளுக்கு பள்ளியிலேயே சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கோபி டி.எஸ்.பி., சுந்தர்ராஜன் பேசுகையில், ''பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் பற்றிய கனவு உண்டு. இக்கனவு, ஆசை மாணவர்களிடத்திலும் வர வேண்டும். மாணவர் பருவத்தில், வருங்காலத்தில் யாராக வர வேண்டும் என்ற குறிக்கோள் நிர்ணயித்து படித்தால், அந்த இலக்கை அடைய முடியும். மாணவர்கள், தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி அடைய முடியும். மாணவர்களிடத்தில் புதைந்து கிடக்கும் திறமைகளை ஆசிரியர்கள் வெளிக்கொண்டு வர வேண்டும். இதற்கு பெற்றோர்கள் ஊக்குவிப்பு தேவை. நல்ல சமூதாயத்தை உருவாக்கும் கூட்டு பொறுப்பு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ளது. திறமைகளை வளர்த்து கொண்டால் எவ்வித போட்டியும் சமாளிக்க முடியும். தன்னை வளர்த்த பெற்றோர், பண்பட்ட மனிதனாக உருவாக்கும் ஆசிரியர்களை மறக்க கூடாது,'' என்றார். ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி.,யில் முதல் மார்க் பெற்ற மாணவ, மாணவிகள், 100 சதவீதம் மார்க் பெற உழைத்த ஆசிரியர்கள், விளையாட்டில் தேசிய அளவில் பதக்கம் பெற்ற மாணவி இனியா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தங்க நாணயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. பள்ளி துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணை செயலாளர் டாக்டர் மாலினி, முதல்வர் மஞ்சுளா, தலைமை ஆசிரியை வசந்தி, மேலாளர் மூர்த்தி, ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் சண்முகம், பி.எட்., கல்லூரி முதல்வர் சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.