Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

ADDED : ஜூலை 24, 2011 09:24 PM


Google News

திருப்புவனம் : கண்மாயில் அனுமதி இன்றி மணல் அள்ளிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்புவனம் போலீசில் ஒப்படைத்தனர்.

உலக வங்கி திட்டத்தில் சிவகங்கை மாவட்டம் அம்பலத்தடி கண்மாய் கரையை பலப்படுத்துவதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் செங்குளம் அருகே உள்ள கருங்காலக்குடி கண்மாயில் மணல் அள்ளுவதாக வி.ஏ.ஓ., தனபாலன், தலையாரி தண்டீஸ்வரனிடம் பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 7 டிப்பர் லாரிகள் 2 டிராக்டர்கள், ஒரு மண் அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களை வருவாய்துறையினர் பறிமுதல் செய்து திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us