/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகணபதி செட்டிக்குளம் பள்ளி முதலிடம்வட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகணபதி செட்டிக்குளம் பள்ளி முதலிடம்
வட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகணபதி செட்டிக்குளம் பள்ளி முதலிடம்
வட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகணபதி செட்டிக்குளம் பள்ளி முதலிடம்
வட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகணபதி செட்டிக்குளம் பள்ளி முதலிடம்
ADDED : செப் 15, 2011 10:54 PM
புதுச்சேரி:வட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் கணபதி செட்டிக்குளம் பள்ளி
முதலிடம் பிடித்தது.புதுச்சேரி கல்வித்துறையின் முதலாம் வட்டம் சார்பில்
நடந்த அறிவியல் கண்காட்சியில் கணபதிசெட்டிக்குளம் அரசு துவக்கப் பள்ளி
மாணவன் நவீன் தயாரித்த விவசாய பெருந்திட்டம் என்ற காட்சிப் பொருளுக்கு வட்ட
அளவிலான முதல் பரிசு வழங்கப்பட்டது.
அறிவியல் வினாடி வினா போட்டியில்
மாணவி கணேஷ்மா முதல் பரிசும், நர்மதா மூன்றாம் பரிசும் பெற்றனர். பரிசு
பெற்றவர்களை பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன் பாராட்டினார்.