ADDED : ஜூலை 13, 2011 10:13 PM
காளையார்கோவில் : காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டும் அதிகாரிகள் இல்லாததால் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மறவமங்கலம்,கொல்லங்குடி, உட்பட 260 கிராமங்கள் காளையார்கோயில் போலீஸ் கட்டுப்பாட்டில் வருகிறது. குற்றம் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் குறித்து அதிகமான புகார்கள் வருகிறது. இங்குள்ள எஸ்.ஐ.,மாறுதலாகி ஒரு ஆண்டும், இன்ஸ்பெக்டர் மாறுதலாகி இரண்டு மாதங்களும் ஆகிவிட்டது. தரம் உயர்த்தப்பட்ட இந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் உட்பட 50 போலீசார் பணியில் இருக்க வேண்டும். தற்போது மகளிர் எஸ்.ஐ., 9 சிறப்பு எஸ்.ஐ., உட்பட 36 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். நீண்ட நாட்களாக காலியாக கிடக்கும் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


