ADDED : செப் 01, 2011 01:58 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக, எம்.எல்.ஏ., ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., மாநகர் மாவட்டமாகவும், புறநகர் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சண்முகவேலு, புறநகர் மாவட்ட செயலாளராகவும், எம்.எல்.ஏ., ஆனந்தன் மாநகர் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற ஆனந்தன், நிர்வாகிகளுடன் சென்று எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார்; மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணப்பன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.எம்.எல்.ஏ., ஆனந்தன் கூறுகையில்,'' வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர், 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம்; மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில மகளிரணி துணை செயலாளர் விசாலாட்சியிடம் மனு அளிக்கலாம்,'' என்றார்.