/உள்ளூர் செய்திகள்/திருச்சி/"டாஸ்மாக்' அகற்றியதில் பாரபட்சம் ஸ்ரீரங்கம் பொதுமக்கள் எதிர்ப்பு"டாஸ்மாக்' அகற்றியதில் பாரபட்சம் ஸ்ரீரங்கம் பொதுமக்கள் எதிர்ப்பு
"டாஸ்மாக்' அகற்றியதில் பாரபட்சம் ஸ்ரீரங்கம் பொதுமக்கள் எதிர்ப்பு
"டாஸ்மாக்' அகற்றியதில் பாரபட்சம் ஸ்ரீரங்கம் பொதுமக்கள் எதிர்ப்பு
"டாஸ்மாக்' அகற்றியதில் பாரபட்சம் ஸ்ரீரங்கம் பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 17, 2011 02:19 AM
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் 'டாஸ்மாக்' மதுபான கடைகளை அகற்றுவதில் அதிகாரிகள்
பாரபட்சநடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் அருகே பல ஆண்டுகளாக 'டாஸ்மாக்' மதுபான கடை
இயங்கி வந்தது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பை காட்டி வந்தாலும் அவர்களது
நியாயமான கோரிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில்
முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற பிறகு
பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புனிதம் வாய்ந்த ஸ்ரீரங்கம் நகரத்தில்
மதுக்கடைவேண்டாம் என சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம்
இருந்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும்
அப்புறப்படுத்த டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவு வந்தது. இதைத்தொடர்ந்து
ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் இருந்த இரண்டு மதுபான கடைகள் இழுத்து
மூடப்பட்டது. ஆனால், ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவரையொட்டி உள்ள தேவி தெரு
மதுபான கடையை மூடாமல் சென்றனர். டாஸ்மாக் அதிகாரிகளின் பாரபட்ச
நடவடிக்கையினால் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இரவு
நேரங்களில் பொதுமக்கள் நடமாட முடியவில்லை. பெண்களை தகாத வார்த்தைகளால்
குடிமகன்கள் திட்டுகின்றனர். எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும்
மேற்கண்ட டாஸ்மாக் மதுபான கடையை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்
வரவேண்டும்.