ஸ்பெக்ட்ரம் ஊழல்: தயாளு மீது வழக்கு கோரி மனு தாக்கல்
ஸ்பெக்ட்ரம் ஊழல்: தயாளு மீது வழக்கு கோரி மனு தாக்கல்
ஸ்பெக்ட்ரம் ஊழல்: தயாளு மீது வழக்கு கோரி மனு தாக்கல்
ADDED : ஜூலை 12, 2011 10:57 PM
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் அனில் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் எம்.பர்கான், காசியாபாத்தைச் சேர்ந்த வர்த்தகர் தர்மேந்திர பாண்டே ஆகியோர், சிறப்பு கோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் மனு செய்தனர். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொழிலதிபர்கள் அனில் அம்பானி, ரத்தன் டாடா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு ஆகியோரை சேர்க்க வேண்டும் என, இவர்கள், மனுவில் கோரியிருந்தனர். மேற்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் சி.பி.ஐ., உண்மையை மூடி மறைப்பதாக இவர்கள் கூறியிருந்தனர். ஆனால், இவர்கள் கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி சிறப்பு கோர்ட், மனுதாரர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து இவர்கள் தற்போது டில்லி ஐகோர்ட்டில் இதே கோரிக்கையை வற்புறுத்தி மனு செய்துள்ளனர். இந்த மனுவை ஐகோர்ட் நாளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறது.


